Home /News /sports /

நான் நன்றாக ஆடிய வீடியோக்களைப் பார்த்து புரிந்து கொண்டேன் - சதநாயகன் விராட் கோலி நெகிழ்ச்சி

நான் நன்றாக ஆடிய வீடியோக்களைப் பார்த்து புரிந்து கொண்டேன் - சதநாயகன் விராட் கோலி நெகிழ்ச்சி

விராட் கோலி

விராட் கோலி

எனது 60 ரன்கள் இன்னிங்ஸெல்லாம் தோல்வியானதுதான். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. நான் நன்றாகவே ஆடினேன், பங்களிப்பு செய்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. - விராட் கோலி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்களை விளாசி தனது 3 ஆண்டுகால சதவறட்சியை போக்கினார்.  ஆட்டம் முடிந்து அவர் தன் சதம் பற்றிக் கூறும்போது,   “முதலில் இந்த நாள் இப்படியாக இருந்ததற்கு என் நன்றி. ஆட்டத்திலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டது என் கரியரைப் பற்றி யோசிக்க கால அவகாசத்தைக் கொடுத்தது.

ஒரேஒரு நபரை நான் குறிப்பிட விரும்புகிறேன், அது அனுஷ்கா சர்மாதான். இந்தக் கடினமான காலக்கட்டங்களில் எனக்கு அனுசரணையாக இருந்தது அவர்தான். நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எனது இன்னொரு பக்கத்தை அவர்தான் இந்தக் காலக்கட்டத்தில் எதிர்கொண்டார். அனுஷ்காதான் எனக்கு விஷயங்களை எடுத்துரைத்தார். எனக்கு சரியான வழிகாட்டுதலையும் வழங்கினார். அவரால்தான் நான் மீண்டும் ஒரு ரிலாக்ஸான மனிதனாக ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளேன்.
நான் யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக அவசரம் காட்டவில்லை.

இதை உண்மையான பொருளில் கூறுகிறேன், நான் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் என்ற கர்வமாக இதைப் பார்க்கக் கூடாது. அதாவது ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவது,கடவுள் எனக்காக என்ன ஏற்கெனவே ஆசீர்வதித்தாரோ அதைப் புரிந்து கொள்வது முக்கியம். பிறகு எளியனாக மைதானத்தில் இறங்கி மகிழ்ச்சியுடன் ஆடுவது. இத்தனை நாட்கள் சதம் எடுக்காமல் போனது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட ஆச்சரியமே. எனது 60 ரன்கள் இன்னிங்ஸெல்லாம் தோல்வியானதுதான். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. நான் நன்றாகவே ஆடினேன், பங்களிப்பு செய்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை.

கடந்த காலங்களில் கடவுள் எனக்கு நிறைய அருள் புரிந்தார், அதனால்தான் இதையெல்லாம் பேசும் நிலையில் இன்று நான் நிற்கிறேன். நான் திரும்பி வந்த போது எனக்கு அணி நிர்வாகத்திடமிருந்து எந்த ஒரு செய்தியும் இல்லை, போ, மகிழ்ச்சியாக ஆடு என்பதே அவர்கள் எனக்குச் செய்த மிகப்பெரிய சாதகம்.

Read more: 1020 நாட்களுக்குப் பிறகு ஆப்கானின் ஆர்வமற்ற பவுலிங்கில் கோலி சதம் - இந்தியா ஆறுதல் வெற்றி

எனக்கு நிறைய அறிவுரைகள் வந்தன. என்னைப் பார்ப்போரெல்லாம் இதைத் தவறாகச் செய்தாய், அதைத் தவறாகச் செய்தாய் என்று அறிவுரை கூறியபடி இருந்தனர். ஆனால் நான் சிறப்பாக ஆடிய அனைத்து ஆட்டங்களின் வீடியோக்களையும் மீண்டும் பார்த்தேன். அது வேறு ஒன்றுமில்லை, பந்து வரும் போது எனது முதல் இயக்கம்பற்றியது. பந்தை அணுகும் விதம் பற்றியதாக இருந்தது. அதுதான் என் மண்டைக்குள் இருந்தது, இதை நான் யாரிடமும் விளக்க முடியவில்லை. கிரிக்கெட்டில் முன்னேற என் பார்வை மாற வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.” இவ்வாறு கூறினார் கோலி.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup, Cricket, India, T20, Virat Kohli

அடுத்த செய்தி