Home /News /sports /

பயிற்சியாளர் பொறுப்பா வேண்டவே வேண்டாம், பார்வையாளனாகவே இருக்கிறேன் - ரவி சாஸ்திரி

பயிற்சியாளர் பொறுப்பா வேண்டவே வேண்டாம், பார்வையாளனாகவே இருக்கிறேன் - ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

டி20 உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியவுடன் ரவி சாஸ்திரியின் பயிற்சிக்காலக்கட்டமும் முடிவுக்கு வந்தது,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஒளிவு மறைவில்லாமல் பேசும் ஒரு பெரிய கேரக்டர். வீரராயினும் வர்ணனையாளராயினும் பயிற்சியாளராயினும் அவருக்கென்றே ஒரு தனிவழி, என் வழி தனி வழி என்று தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் என்றால் அது மிகையல்ல.

இவரது கட் அண்ட் ரைட் அணுகுமுறை மற்றும் வீரர்கள் மற்றும் ஊடகங்களை நிர்வகிக்கும் திறமையை விதந்தோதி ஒருமுறை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் ரவி சாஸ்திரியை அதன் மீடியா மேனேஜராக நியமித்தது என்றால் இவரது திறமையை நாம் யூகித்துக் கொள்ளலாம். ஒன்று சரி என்றால் சரி, தவறென்றால் தவறு, இதுதான் ரவி சாஸ்திரி.

டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவ் தலைமைக்குப் பிறகு கங்குலி, பிறகு கும்ப்ளே பிறகு கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பு வெளிநாடுகளில் அதிகரித்தது, அதில் குறிப்பாக ரவி சாஸ்திரி பயிற்சிக் காலக்கட்டங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி உச்சம் தொட்டது.

இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறும்போது, “என் பயிற்சிக் காலக்கட்டம் முடிந்து விட்டது. 7 ஆண்டுகளில் போதுமானதைச் செய்து விட்டேன். இனிமேல் கோச்சிங் என்று செய்தால் அது மிகவும் வேரடி மட்டத்தில் இளம் வீரர்களுக்காகத்தான் இருக்கும். இதற்கான நிறுவனம் வைத்துள்ளேன் அதில் இந்த வேலை நடந்து வருகிறது. நான் அதில் பங்கேற்று வருகிறேன்.

மற்றபடி பயிற்சியாளராக என் காலம் முடிந்து விட்டது. நான் இப்போது ஒரு பார்வையாளனாக கிரிக்கெட்டை தூரத்திலிருந்து ரசிப்பவன் அவ்வளவே.” என்றார்.

Read More: ரிட்டையர்மெண்ட் கிளப்புக்கு பெடரரை வரவேற்று செரீனா உருக்கம்

டி20 உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியவுடன் ரவி சாஸ்திரியின் பயிற்சிக்காலக்கட்டமும் முடிவுக்கு வந்தது, கோலியின் கேப்டன்சி காலக்கட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.
Published by:Srilekha A
First published:

Tags: Cricket, India, Ravi Shastri, T20 World Cup

அடுத்த செய்தி