ஆசியக் கோப்பை கால்பந்து - இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா தோல்வி!
ஆசியக் கோப்பை கால்பந்து - இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா தோல்வி!
ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி
மூன்று முறை கோல் அடிக்கும் வாய்ப்பை இந்திய வீரர்கள் நழுவவிட்டனர். ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரக வீரர் முபாரக் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார்.
ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில், போட்டியை நடித்தும் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. முதல் லீக் போட்டியில் தாய்லாந்தை பந்தாடி, 55 ஆண்டுகளுக்கு பின் வரலாறு வெற்றியை படைத்த உற்சாகத்தில் இந்திய வீரர்கள் களமிறங்கினார்.
ஆனால், தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மூன்று முறை கோல் அடிக்கும் வாய்ப்பை இந்திய வீரர்கள் நழுவவிட்டனர்.
ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரக வீரர் முபாரக் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இந்திய வீரர்களால் பதில் கோல் அடிக்க முடியாததால், முதல் பாதியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகம் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 88 நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரக அணி இரண்டாவது கோலை பதிவு செய்தது. இறுதி வரை இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியாததால், இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் அணி ஏ பிரிவின் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.