ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

18-வது ஆசிய போட்டிகள்: வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு

18-வது ஆசிய போட்டிகள்: வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்

வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது.

  18-வது ஆசிய விளையாட்டி போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பங் நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,300 வீரர்கள், வீராங்கனைகள் பதக்க வேட்டையாடினர். 15 நாட்கள் கொண்டாடப்பட்ட ஆசிய விளையாட்டு நிறைவு விழா ஜகார்த்தா நகரில் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

  கலைநிகழச்சியை அடுத்து, ஒவ்வொரு நாடுகளின் வீரர், வீராங்கனைகளும் அணிவகுத்தனர். இதில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், தேசியக் கொடியை ஏந்திச் செல்ல அவரை வீரர் வீராங்கனைகள் பின் தொடர்ந்தனர். பின்னர், 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்ததாக ஆசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷேக் அகமத் அல்-சபா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  மேலும், 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் காங்ஜோவ் (Hangzhou) நகரில் 2022-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், போட்டிக்கான கொடி அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

  அதை தொடர்ந்து, காங்ஜோவ் (Hangzhou) நகரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் காட்சிப் படம் ஒளிபரப்பப்பட்டது. அத்துடன் இசைக்கலைஞர்களின் இசையில் ஜகார்த்த நகரமே நனைந்தது. ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தில் மைதானமே அதிர்ந்தது. இறுதியாக கண்கவர் வாணவேடிக்கையுடன் 18-வது ஆசிய விளையாட்டு நிறைவு பெற்றது.

  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2014 போட்டியில், 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் 8-வது இடம் பிடித்தது. தற்போது, 2018 தொடரில், 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் அதே 8-வது இடம் பிடித்தது. மேலும் ஒரு தொடரில் இந்தியா அதிக பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Asian Games 2018