முகப்பு /செய்தி /விளையாட்டு / ஹாங்காங் ஓபன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

ஹாங்காங் ஓபன்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

Hong Kong Open: PV Sindhu Knocked Out; Srikanth and Sameer Verma To Enter Quarters | ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் 2வது சுற்றிலேயே தென் கொரியா வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, தென்கொரியாவின் சங் ஜி ஹூயனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

பட்டம் வென்றால் 500 தரவரிசைப் புள்ளிகள் வழங்கப்படும் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரானது அக்டோபர் 13-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தென்கொரியாவின் சங் ஜி ஹூயன் உடன் பலப்பரீட்சை நடத்தினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 24-26, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் சிந்து போராடி தோல்வி அடைந்தார். தரவரிசையில் பின் தங்கியுள்ள வீராங்கனையிடம் சிந்து தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

களத்தில் வெற்றிக்காக போராடும் பி.வி.சிந்து

இதற்கிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், 18-21, 30-29, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் ப்ரணாயை வீழ்த்தி காலிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வெர்மா, தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சீனாவின் சென் லாங்கை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் காயம் காரணமாக சென் லாங் போட்டியில் இருந்து விலகியதால் சமீர் வெர்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம், அவரும் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

மேலும் பார்க்க...

First published:

Tags: Badminton, Hong Kong Open, PV Sindhu