உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி, தொடரில் இருந்து வெளியேறியது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-வது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. இதன், 4-வது காலிறுதிப் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்து அணியுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் களம் கண்ட இந்தியா, தொடக்கத்தில் வேகம் காட்டியதால், 12-வது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இந்த உற்சாகத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த 3 நிமிடங்களுக்குள் நெதர்லாந்து பதில் கோல் அடித்தது. இதையடுத்து, நெதர்லாந்து அணியின் கையே ஓங்கியிருந்ததால், 50-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து மிரட்டியது.

இந்தியாவை வென்றது நெதர்லாந்து அணி
பின்னர் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டத்தின் முடிவில், 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. வருகின்ற 15-ம் தேதி நடைபெறும் அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான
ஆஸ்திரேலியாவுடன் நெதர்லாந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கடைசியாக 1975-ம் ஆண்டு தங்கம் வென்றது. இதையடுத்து, ஒருமுறை கூட அரையிறுதிக்குள் நுழைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி, 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனியை வீழத்தியது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதியில் இங்கிலாந்துடன், பெல்ஜியம் அணி மோதவுள்ளது.
Also See... திருவாரூர் மாவட்ட மாணவி யோகாவில் உலக சாதனை!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.