ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி

உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி

அர்ஜெண்டினா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி

அர்ஜெண்டினா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி

World Cup Hockey | முதல் நாள் போட்டியில் அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா போட்டியும் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகள் மோதின

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa), India

உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றன.

தொடக்க நாளான இன்று, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில், ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அர்ஜெண்டினா வீரர் மைக்கோ கசெல்லா (Maico Casella) 43ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதனையடுத்து 3 மணியளவில் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா வீரர் டாம் கிரேக் (tom craig) முதல் கோலை அடித்து ஆட்டத்தை சூடுபிடிக்க செய்தார். அடுத்தடுத்து, தீரத்துடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள், 8 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி துவம்சம் செய்தனர்.

First published:

Tags: World Cup Hockey 2023