Home /News /sports /

உலகக் கோப்பை ஹாக்கி: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்!

உலகக் கோப்பை ஹாக்கி: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம்!

வெற்றி பெற்ற பெல்ஜியம் அணியினர்

வெற்றி பெற்ற பெல்ஜியம் அணியினர்

Hockey World Cup | தொடர்ந்து 2-வது முறை இறுதிப் போட்டிவரை முன்னேறியும் நெதர்லாந்து ஏமாற்றம் கண்டது. அதேவேளையில், பெல்ஜியம் அணி, முதல் முறை சாம்பியன் மகுடம் சூடி சாதித்துள்ளது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில், ஷூட்-அவுட் முறையில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-வது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெற்றது. இதன், அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள், 3-வது இடத்திற்காக மோதின.

இதில், தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 8-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றது.

இதையடுத்து, சாம்பியன் யார் என்பதை நிரூபிக்கும் இறுதிப் போட்டியில் பெல்ஜியம் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியை, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நேரில் கண்டுகளித்தனர்.



இறுதிப் போட்டியில் இரு அணிகளும் வேட்கையுடன் ஆடியதுடன், தற்காப்பில் அதிக கவனம் செலுத்தின. பரஸ்பரம் கோல் ஏதும் அடிக்காததால், பிரதான நேர முடிவில் சமநிலை எட்டப்பட்டது.

இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. தலா 5 வாய்ப்புகளில் 2-2 என்ற கோல்கணக்கில் மீண்டும் சமநிலை எட்டப்பட்டதால் விறுவிறுப்பு கூடியது.

பின்னர், வழங்கப்பட்ட 6-வது வாய்ப்பில் பெல்ஜியம் வீரர், வான் அபெல் (VAN AUBEL), நேர்த்தியாக செயல்பட்டு கோல் அடித்தார். ஆனால், கடைசி வாய்ப்பை நெதர்லாந்து ஹெர்ட்பெர்கர் (HERTZBERGER) வீணடிக்கவே, 3-2 என பெல்ஜியம் அணி த்ரில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து 2-வது முறை இறுதிப் போட்டிவரை முன்னேறியும் நெதர்லாந்து ஏமாற்றம் கண்டது. அதேவேளையில், பெல்ஜியம் அணி, முதல் முறை சாம்பியன் மகுடம் சூடி சாதித்துள்ளது.

Also see... சாடிஸ்ட் பிரதமராக செயல்படுகிறார் மோடி: மு.க.ஸ்டாலின் 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hockey Men’s World Cup

அடுத்த செய்தி