Home /News /sports /

உலகக் கோப்பை ஹாக்கி: டிராவில் முடிந்த இந்தியா-பெல்ஜியம் போட்டி

உலகக் கோப்பை ஹாக்கி: டிராவில் முடிந்த இந்தியா-பெல்ஜியம் போட்டி

இந்திய ஹாக்கி அணி

இந்திய ஹாக்கி அணி

Hockey World Cup 2018 | உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் டிசம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவுடன் மோதவுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல்கணக்கில் சமனில் முடிந்தது. கடைசிக் கட்டத்தில் இந்தியா கோல் வாங்கியதால், வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறுகிறது. இதன், 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, 3-ம் இடம் வகிக்கும் பெல்ஜியம் அணியுடன் மோதியது. தொடக்கத்திலேயே தாக்குதலை தீவிரப்படுத்திய பெல்ஜியம் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 30-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டோக் வாய்ப்பை, இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் கோலாக மாற்றி, பதிலடி கொடுத்தார். மேலும், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் ஆக்ரோஷமாக இந்திய விளையாடியது. இதன் எதிரொலியாக, 47-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங், ஃபீல்டு கோல் அடிக்கவே முன்னிலை பெற்றது.

இந்திய ஹாக்கி அணியினர்


இந்தியா வெற்றிபெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருக்கும் போது அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய தடுப்பு அரண் சற்று பலவீனமானதை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் வீரர் சிமோன் கோல் அடித்து மிரட்டினார்.

முடிவில், 2-2 என்ற கோல்கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிகளும் இதுவரை ஆடிய 2 ஆட்டங்களில், தலா ஒரு வெற்றி, ஒரு டிரா கண்டுள்ள போதும், கோல்களின் அடிப்படையில் இந்தியா 'சி' பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.

மேலும் வருகின்ற 8-ம் தேதி நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவுடன் மோதவுள்ளது. இதில், அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்பட்சத்தில் நேரடியாக காலிறுதியில் இந்தியா தடம் பதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also see... ராஜஸ்தான் தேர்தல்... பாஜக, காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியா?

Published by:Vaijayanthi S
First published:

Tags: Hockey World Cup 2018

அடுத்த செய்தி