உலகக் கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
இந்திய ஹாக்கி அணியினர்
'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, 5-1 என தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் இப்பிரிவில், இந்தியாவும், பெல்ஜியமும் தலா 2 வெற்றி, ஒரு டிராவை சந்தித்து சம புள்ளிகள் பெற்றன.
உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில், இந்திய அணி 5-1 ஒன்று என்ற கோல்கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதனால் நேரடியாக காலிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-வது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 'சி' பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா, தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது.
வெற்றிபெறும் நோக்கில் இருஅணிகளும் வேகம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருந்த போதும், உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுக்கு மத்தியில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்தியாவுக்கு 12-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை, ஹர்மன்பீரீத் சிங் கோலாக மாற்றி கணக்கை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, கனடாவும் பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆடியது. அதற்கு, 39-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் ஃபுளோரிஸ், ஃபீல்டு கோல் அடிக்கவே ஆட்டம் சமநிலையை எட்டியது.
ஆனால், அதிக கோல்கள் அடித்து வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில், இந்திய வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோல் மழை பொழியத் தொடங்கினர். நான்காவது கால்பாதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து நான்கு கோல்கள் அடித்து கனடாவை நிலைகுலையச்செய்தனர்.
இறுதியில் இந்தியா 5க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு கோல்கள் அடித்த இந்திய வீரர் லலித் உபாத்யா ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார்.
முன்னதாக நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, 5-1 என தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் இப்பிரிவில், இந்தியாவும், பெல்ஜியமும் தலா 2 வெற்றி, ஒரு டிராவை சந்தித்து சம புள்ளிகள் பெற்றன.
இருந்த போதும், எதிரணியை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி இப்பிரிவில் முதலிடம் பிடித்து, காலிறுதிக்குள் நேரடியாக தடம் பதித்தது. இரண்டாமிடம் பெற்ற பெல்ஜியம், 3-வது இடம் பிடித்த கனடா அணிகள், கால் இறுதி சுற்றுக்கான போட்டிகளில் பங்கேற்கின்றன. கடைசி இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா தொடரிலிருந்து வெளியேறியது.
Also see... ராஜஸ்தான் முதல்வர் உடலமைப்பு பற்றி பேசிய சரத் யாதவ்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.