இந்திய ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகளை உற்றுநோக்கும்போதும் கடந்த 18 மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு இங்கிலாந்து தான் என்பது உணர்ந்துள்ளோம். காமன்வெல்த் விளையாட்டுகள் இங்கிலாந்தின் பிர்மிங்காம்மில் 2022-ம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதிவரையும், ஆசிய விளையாட்டுகள் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 10-25-ம் தேதி வரையும் திட்டமிடப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியும். காமன்வெல்த் போட்டிகள் முடிவடைவதற்கும் ஆசிய விளையாட்டுகள் தொடங்குவதற்குமான இடைவெளி வெறும் 32 நாள்கள்தான். ஆசிய விளையாட்டுகள்தான் 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான கண்டம் தேர்வு விளையாட்டு.
ஆசிய விளையாட்டுகளை மனதில்கொண்டு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டாம் என்று இந்திய ஹாக்கி அணி விரும்புகிறது. அதனால், காமன்வெல்த் 2022 தொடருக்கு இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அனுப்பப்படாது. அதனால், காமன்வெல்த் போட்டிகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க விரும்புகிறோம்.
கொரோனா பாதிப்புச் சூழல் காரணமாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசியை இரண்டு தவணை எடுத்துக்கொண்டவர்களாக இருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டியது கட்டாயம் என்ற விதிமுறைகள் இருப்பதும், இதுவரையில், இந்தியா கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம் அளிக்காததும் இதனுடன் தொடர்புடைய ஒரு காரணம்.
இத்தகைய பாகுபாடுடைய கட்டுப்பாடுகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது இந்திய வீரர்களுக்கு விதிக்கப்படவில்லை. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட வீரர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடு அவர்களை விளையாட்டைப் பாதிக்கும். இந்தியாவுக்கு எதிரான இந்தக் கட்டுப்பாடுகள் ஒருதலைப்பட்சமானது. இது துரதிருஷ்டவசமானது’ என்று தெரிவித்துள்ளனர்.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.