ஃபிஃபா 2018: இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள குரேஷியாவின் வரலாறு

news18
Updated: July 12, 2018, 9:22 PM IST
ஃபிஃபா 2018: இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள குரேஷியாவின் வரலாறு
கோப்புப்படம்
news18
Updated: July 12, 2018, 9:22 PM IST
ஃபிஃபா 2018 உலகக்கோப்பை போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச் சுற்றுவரை முன்னேறியுள்ள குரேஷியா நாட்டை பற்றிய சில முக்கியமான தகவல்களை இப்போது பார்க்கலாம்...

உலகில் புதிதாக உருவெடுத்த குட்டி தேசங்களில் ஒன்று குரோஷியா. கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியா-க்கு வயது 17. உதயமான 1991ல் இருந்து, 4 ஆண்டுகள் செர்பியா-உடனான போரால் பேரழிவைச் சந்தித்து மீண்ட குரோஷியா, தற்போது கால்பந்து சரித்திரத்தில் முத்திரை பதித்துள்ளது.

முன்னால் சோஷலிச யூகோஸ்லாவியா உடைந்து சிதறுண்டதால் பிறந்த, குரோஷியா இயற்கை வளமுடன், உயிரோட்டமுள்ள கலாச்சாரமும் கொண்ட எழில்மிகு தேசம். இந்தியாவின் பரப்பளவில் மிகச் சிறிய மாநிலமான இமாச்சல பிரதேசதத்தின் அளவைதான் கொண்டுள்ளது குரோஷியா. இந்நாட்டின் மக்கள் தொகை, 41 லட்சம். அதாவது 50 லட்சத்தை எட்டியுள்ள நமது சென்னையை விட 9 லட்சம் குறைவு.  இந்த குட்டி தேசத்தில், குரோஷியர்கள், செர்பியர்கள், போஸ்னியர்கள் மற்றும் ரோமா என்னும் ஜிப்ஸிக்கள் உள்ளனர்.

1500 ஆண்டுகளுக்கு முன்னமே, தனிக் குரோஷிய அரசு இருந்தபோதும், வரலாறு நெடுக பல்வேறு படையெடுப்புகளைத் தொடர்ந்து நீடித்த அந்நிய ஆட்சியைச் சந்தித்தது குரோஷிய மண். ரோமப் பேரரசு முதல், ஆஸ்திரிய-ஹங்கேரிய மற்றும் துருக்கிய ஒட்டாமன் பேரரசின் ஆளுகை வரை, அயலவர் கீழிருந்தாலும், குரோஷியா தனக்கான தனித்துவத்தை இழந்துவிடவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், மார்ஷல் டிட்டோவின் சோஷலிச யூகோஸ்லாவியாவின் பகுதியானது. டிட்டோ, குரோஷியாவில் பிறந்து வளர்ந்தவர்.

இன்னும் கூட்டுக் குடும்ப முறை தொடரும் குரோஷியாவில், விவசாயமே பிரதான தொழில். சோஷலிச ஆட்சியின் போது, யூகோஸ்லாவியாவின் பிற பகுதிகளைவிட, குரோஷியாவில் தொழில்துறை அதிக வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும், விவசாயத்திற்கேற்ற நிலவளமும், நீர்வளமும் உள்ளதால், பெரும்பான்மை மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டடங்கள், தேவாலயங்கள், வீடுகள், தெருக்கள் அனைத்திலும் நவீனமும், பாரம்பரியமும் ஒருங்கே அமைந்துள்ள குரோஷியா, சுற்றூலவுக்கும் பெயர் பெற்றது. உலகின் மிகச் சிறந்த நாய் இனங்களுள் ஒன்றான டால்மேஷிய-னின் பூர்வீகம் குரோஷியாவின், ஏட்ரியாட்டிக் கடலை ஒட்டிய ஆல்ப்ஸ் மலைச் சரிவில் உள்ள டால்மேஷியா பிராந்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து விளையாட்டே இந்நாட்டில் பிரதானமாக விளையாடப்படுகிறது. 1901- ஆம் ஆண்டு முதன் முதலில் குரோஷியா கால்பந்து கிளப் தொடங்கப்பட்டது. இந்த சர்வதேச கால்பந்து போட்டியில் 1940- ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு எதிராக களம் கண்டது. தற்போதைய கால்பந்து அணியின் கேப்டன் லுகா மாட்ரிக்கின் குடும்பத்தினர் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...