உலகின் பழமையான கால்பந்து தொடரான கோபா அமெரிக்கா திருவிழா. பல்வேறு சரித்திர பக்கங்களை உள்ளடக்கி கால்பந்தின் அடையாளமாக திகழ்கிறது.
1916 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் ஆரம்பத்தில் தென் அமெரிக்க சாம்பியன்ஷிப் என ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு
1975ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் என பெயர் மாற்றப்படுகிறது. நூற்றாண்டை கடந்து நடத்தப்படும் இந்த தொடரின் மூலம் தான் உலகமே பார்த்து வியக்கும் மரடோனா, பீலே, மெஸ்ஸி, நெய்மர் என தலைசிறந்த வீரர்கள் உருவாகி வந்துள்ளனர்.
தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகள் மட்டும் மல்லுக்கட்டும் இந்த தொடரில் உருகுவே அணி 15 முறை சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினா 14 முறையும், பிரேசில் 9 முறையும் கோப்பையை கைப்பற்றின.
கோபா அமெரிக்கா தொடக்க காலத்தில் பிரேசில் அணி தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. அந்த சமயங்களில் உருகுவேயும், அர்ஜென்டினாவும் மாறி, மாறி கோப்பை வாங்கி குவித்துள்ளன.
பிரேசில் அணி தலையெடுக்க ஆரம்பித்ததில் இருந்து இந்த இரு அணிகளும் ஆட்டம் காண ஆரம்பித்தன.இந்நிலையில் 48-வது தொடரில் அர்ஜெண்டினா மகுடம் சூடியதன் மூலம்,
கோபா அமெரிக்கா தொடரில அதிகமுறை பட்டம் வென்ற அணிகளில் உருகுவே அணியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.