ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்.. இடம் பிடித்த சஞ்சு சாம்சன்.. இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்.. இடம் பிடித்த சஞ்சு சாம்சன்.. இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஹர்திக்

ஹர்திக்

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, தலா மூன்று டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.இதற்கான, இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதில், காயத்தில் இருந்து மீண்டு வரும் ரோஹித் சர்மாவுக்கு மேலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அவருக்குப் பதில் டி-20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தவுள்ளார்.

மேலும், முன்னணி வீரர் விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன், டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான அணியில் இருந்து ரிஷப் பந்த் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர்.டி-20 தொடரை பொருத்தவரை இஷான் கிஷண், ரிதுராஜ், ஷுப்மன் கில், சூர்யகுமார், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் அங்கம் வகிக்கின்றனர்.இவர்களுடன், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். மேலும்,

யுஸ்வேந்தர் சஹல், அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மவி, முகேஷ் குமார் ஆகிய 16 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில்,

இந்தியா - இலங்கை இடையிலான முதல் டி-20 போட்டி, 3-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket