இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற மூன்று டி-20 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் முதன்முறையாக டி-20 போட்டியில் களமிங்கிய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். மூன்று போட்டிகளிலும் அவருடைய பங்களிப்பு அணியின் வெற்றிக்கு உதவியுது. கடந்த மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இந்திய அணிக்கான அவருடைய முதல் டி-20 தொடர் சிறப்பாக அமைந்தது.
இன்றைய போட்டியின் முடிவில் ஹர்திக் பாண்டியாகவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வாங்கும்போது பேசிய ஹர்திக் பாண்டியா,''எனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது நடராஜனுக்குத்தான் உண்மையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர்தான் அதற்குத் தகுதியானவர். அவரால்தான் இலக்கில் 10 ரன்கள் குறைக்க முடிந்தது” எனப் புகழாரம் சூட்டினார்.
இந்த டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நடராஜனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் நாயகன் விருதும் ஹர்திக் பாண்டியாகவுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடராஜனிடம் தனது தொடர் நாயகன் விருதை வழங்கி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, ’இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினீர்கள் நடராஜன். இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியில் களமிறங்கி, கடினமான நேரத்தில் அற்புதமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். உங்கள் திறமையையும், கடின உழைப்பையும் அறிமுகம் பேசுகிறது. என்னைப் பொறுத்தவரை தொடர் நாயகன் விருதுக்கு உரித்தானவர் நீங்கள்தான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டார்.
போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கொடுக்கப்பட்ட டி20 தொடருக்கான கோப்பையை கேப்டன் கோலி அறிமுக வீரராக களம் இறங்கி அசத்திய நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்