முட்டாள்தனத்துக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்..? ஹர்பஜன் சிங் ஆதங்கம்!

ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கேற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.

முட்டாள்தனத்துக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்..? ஹர்பஜன் சிங் ஆதங்கம்!
ஹர்பஜன் சிங்
  • Share this:
கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம் முட்டாள்தனத்துக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும் அறிவறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கொரோனாவை ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் வகையில் ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கேற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.


பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று பலர் தங்கள் வீடுகள் விளக்கேற்றியும், மொட்டை மாடியில் செல்போன் டார்ச் அடித்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதில் சிலர் வெடி வெடித்தும் கொண்டாடினர். இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெடி வெடித்தால் ஏற்பட்ட தீவிபத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், “கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம், இதுபோன்ற முட்டாள்தனத்திற்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்“ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.













சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading