• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இண்டிகோ விமானத்தில் திருடப்பட்ட ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட்..!

இண்டிகோ விமானத்தில் திருடப்பட்ட ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் பேட்..!

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்கிடம் டிவிட்டரில் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

  • Share this:
    கோவை வந்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் 'கிரிக்கெட் பேட்' விமானத்தில் திருடப்பட்டதாக அவர் டிவிட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 6 ம் தேதி இண்டிகோ விமானம் மூலம் மும்பையில் இருந்து கோவைக்கு வந்துள்ளார். அப்போது ஹர்பஜன் சிங்கின் 'கிட் பேக்கில்' இருந்த கிரிக்கெட் பேட் காணாமல் போனதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

    தனது கிரிக்கெட் பேட் திருடப்பட்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது கிரிக்கெட் பேட்டை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், ஹர்பஜன் சிங்கிடம் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ விமான நிறுவனம், இது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    .



    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: