சென்னை இளைஞர்கள் மீது ஹர்பஜன் சிங் ₹4 கோடி மோசடி புகார்.. பகீர் பின்னணி என்ன?

பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக மகேஷ் மீது நீலாங்கரை காவல் உதவி ஆணையரிடம் ஹர்பஜன்சிங் புகார் அளித்தார்

  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 11:24 AM IST
  • Share this:
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அளித்த புகாரில் முன்ஜாமின் கேட்ட சென்னை இளைஞரின் வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை உத்தண்டியைச் சேர்ந்தவர் 37 வயதான மகேஷ். இவரும், பிரபா சேகர் என்பவரும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக தாழம்பூரில் உள்ள அசையா சொத்தை ஈடாக கொடுத்துள்ளனர்.

பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக மகேஷ் மீது நீலாங்கரை காவல் உதவி ஆணையரிடம் ஹர்பஜன்சிங் புகார் அளித்தார். மகேஷை போலீசார் அழைத்த நிலையில், முன்ஜாமின் கேட்டு மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் 2015 ஆம் ஆண்டு வாங்கிய 4 கோடி ரூபாய் கடனுக்கு 4 கோடியே 5 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தி விட்டதாக கூறியுள்ளார்.


தற்போது வட்டித்தொகையை குறைத்து கொள்வது குறித்து ஹர்பஜனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் பேச்சுவார்த்தையின்போது தொகை நிரப்பாமல் கையெழுத்து போட்ட 8 காசோலைகளை ஹர்பஜன் சிங்கிடம் கொடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பேச்சுவார்த்தை தடைப்பட்ட நிலையில், அந்த காசோலையில் 25 லட்சம் ரூபாய் என நிரப்பி, அதை வங்கியில் ஹர்பஜன் செலுத்தியதாக மகேஷ் தனது மனுவில் கூறியிருந்தார். ஏற்கனவே தான் காசோலைக்கு பணம் தர வேண்டாம் என்று வங்கிக்கு கடிதம் கொடுத்து இருந்ததால், அந்த காசோலை திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மகேஷ் தெரிவித்தார்.இந்த நிலையில்தான் தன் மீது ஹர்பஜன் சிங் மோசடி புகார் அளித்துள்ளதாக கூறினார். அந்த புகாரில் தன்னை கைது செய்ய போலீசார் முயற்சிப்பதாகவும், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் எனக் கேட்டார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹர்பஜன்சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணையை தான் செய்து வருகின்றனர். அதற்காக நேரில் வர மட்டுமே கூறியதாக தெரிவித்தார்.இதையடுத்து மனுவை முடித்து வைத்த நீதிபதி, போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்கவேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில், மனுதாரர் மீண்டும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் கூறினர்.

 
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading