Home /News /sports /

பக்ரைன் கால்பந்து வீரருக்கு குடியுரிமை கொடுத்த ஆஸி. அரசு!

பக்ரைன் கால்பந்து வீரருக்கு குடியுரிமை கொடுத்த ஆஸி. அரசு!

ஹக்கிம் அல்-அரைபி. (Twitter)

ஹக்கிம் அல்-அரைபி. (Twitter)

#HakeemalAraibi, refugee footballer, gets #AustralianCitizenship | 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசு அல்-அரைபிக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கியது.

  • News18
  • Last Updated :
    பக்ரைனில் இருந்து அகதியாக வந்த பிரபல கால்பந்து வீரருக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.

    பக்ரைன் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஹக்கிம் அல்-அரைபி, கடந்த 2012-ல் அந்நாட்டு அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல் நிலையத்தை சேதப்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

    போராட்டம் நடைபெற்ற காலத்தில் தான் பக்ரைன் அணிக்காக விளையாடியதாக கூறிய அவர், தனது மீதான குற்றச்சாட்டை மறுத்தார். 2014-ல் இருந்து ஹக்கிம் அல்-அரைபி ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள கிளப் அணிகள் சார்பில் கால்பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

    Hakeem al-Araibi, ஹக்கிம் அல்-அரைபி
    பாங்காக்கில் கைது செய்யப்பட்ட ஹக்கிம் அல்-அரைபி. (Image AP)


    2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு அவருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கியது. பக்ரைன் அரசு கோரியதைத் தொடர்ந்து, கடந்த 2018-ல் தனது மனைவியுடன் தேனிலவை கழிப்பதற்காக, தாய்லாந்து சென்ற அல்-அரைபியை பாங்காக்கில் வைத்து சர்வதேச காவல்துறையினர் கைது செய்தனர். பல்வேறு தரப்பினரின் போராட்டங்களைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில், ஹக்கிம் அல்-அரைபிக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. மெல்போர்னில் இன்று (மார்ச் 12) நடந்த விழாவில், அல்-அரைபி உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த 200 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.



    குடியுரிமை பெற்றபின் அல்-அரைபி பேசுகையில், “இன்று முதல் தான் ஒரு ஆஸ்திரேலியர் என்றும், இப்போதுதான் பாதுகாப்புடன் இருப்பதை உணர்கிறேன்” என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

    பஞ்ச் நாயகனுக்கே... பஞ்ச் கொடுத்த ஹர்பஜன்!

    இந்திய அணியின் பாதி கேப்டன் தோனி... மீதிதான் கோலி: முன்னாள் கிரிக்கெட் வீரர்!

    நாளை கடைசி போட்டி... இந்திய அணியில் என்ன மாற்றம்...?

    விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

    VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Australia, Football

    அடுத்த செய்தி