முகப்பு /செய்தி /விளையாட்டு / ஊக்கமருந்து விவகாரம்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடை!

ஊக்கமருந்து விவகாரம்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடை!

திப்பா கர்மகர்

திப்பா கர்மகர்

வரும் ஜூலை 10-ம் வரை இந்த தடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதற்காக, 21 மாதங்கள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர், 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4ம் இடத்தை பிடித்தார். இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில், அவர் ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தீபா கர்மாகருக்கு ஊக்கமருந்து விவகாரத்தில் 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டதை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உறுதி செய்துள்ளது . வரும் ஜூலை 10-ம் வரை இந்த தடை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபா கர்மாகருக்கு 2016ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

First published:

Tags: Ban, Gym, Sports Player, Steroids