ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி

அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

  இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஹாக்கிப் போட்டிகளில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

  விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் நான்காவது பாதியில் மட்டும் 3 கோல்களை அடித்த இந்திய அணி தென் கொரியாவை அதிரடியாக வீழ்த்தியது. போட்டியின் 16-வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்நீத் கவுர் அடித்த கோலை, கொரியாவின் யூரிம் லீ 20-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து சமன் செய்தார்.

  பின்பு 54-வது மற்றும் 55-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை இந்தியாவின் குர்ஜிட், 2 கோல்களாக மாற்றியவுடம் இந்திய அணியின் கை ஓங்கியது. இறுதியாக 56-வது நிமிடத்தில் வந்தனா கத்தாரியா அடித்த கோல், அணியின் வெற்றியை உறுதி செய்தது.

  இந்த வெற்றியின் மூலம் பி-பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. அரையிறுதிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Asian Games 2018