Home /News /sports /

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிகள் சரினுக்கு தங்கம்..பிரக்கியானந்தா வெண்கலம்

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் நிகள் சரினுக்கு தங்கம்..பிரக்கியானந்தா வெண்கலம்

நிகள் சரின், பிரக்கியானந்தா, குகேஷ்

நிகள் சரின், பிரக்கியானந்தா, குகேஷ்

Chess Olympiad: தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய வீரர்கள் தனி நபர் சாம்பியன்ஷிப் பிரிவில் பதக்கங்களை அள்ளிக் குவித்துள்ளனர். இந்திய வீரர்களான குகேஷ், நிகள் சரின், எரிகேசி அர்ஜீன் மற்றும் பிரக்யானந்தா உள்ளிட்டோர் பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் குகேஷ் மற்றும் நிகள் சரின் தங்கம் வென்றுள்ளனர்.

    சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்திய அணியில் கிராண்ட்மாஸ்டர்கள் அதிகம் இருப்பதாலும், குகேஷ் பிரக்கியானந்தா போன்ற சிறந்த வீரர்கள் இருப்பதாலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகக் கருதப்பட்டது.

    இந்நிலையில் தனிநபர்களுக்கான சாம்பியன்ஷிப் பிரிவில் இந்திய அணியின் நான்கு பேரும் பதக்கங்களை வென்றுள்ளனர். குகேஷ் மற்றும் நிகள் சரின் தங்கமும், எரிகேசி அர்ஜுன் வெள்ளிப்பதக்கமும், பிரக்கியானந்தா வெண்கலமும் வென்றுள்ளனர்.

    சற்று முன்னதாக பிரக்கியானந்தா, குகேஷ் அடங்கிய இந்திய அணி ஓப்பன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது. 188 நாடுகள் பங்குபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அதற்கான நிறைவு விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி