விமானப்படை வீரர்களுக்கு `குரூப் கேப்டன்' சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து- வீடியோ

விமானப்படை வீரர்களுக்கு `குரூப் கேப்டன்' சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து- வீடியோ
சச்சின் டெண்டுல்கர்.
  • News18
  • Last Updated: October 8, 2018, 7:25 PM IST
  • Share this:
தேசிய விமானப்படை தினம் கொண்டாடும் இந்திய விமானப்படையினருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று 86-வது தேசிய விமானப்படை கொண்டாடப்படுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று பிரம்மாண்டமான அணிவகுப்பு நடந்தது. இதில் இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பாவானான சச்சின் டெண்டுல்கரும் கலந்துகொண்டார். கடந்த 2010-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய விமானப்படையில் கவுரவ குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இப்பதவி இந்திய அணிக்காக டெண்டுல்கரின் பங்கை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்டது.

இந்திய வரலாற்றில் விளையாட்டுத்துறையை சேர்ந்த ஒருவருக்கு விமானப்படையில் கவுரவ பதவி வழங்கியது அதுவே முதல் முறை. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட சச்சின் தன் ட்விட்டர் பக்கத்தில் விமானப்படையினரை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், ``இன்று ஒரு சிறப்பான நாள். நம் வான் வெளியைக் காக்கும் இரட்சகர்களுக்கான நாள். நாங்கள் மேலே பார்க்கும் போதெல்லாம் நீங்கள் தெரிவதில்லை ஆனால் நீங்கள் எப்போதும் எங்கள் வான் வெளியில் இருந்து கண்ணுக்கு தெரியாத எல்லைகளை காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்” என்று சச்சின் பேசியுள்ளார்.

First published: October 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading