விளையாட்டு பயிற்சிகளுக்கு அரசு அனுமதி: செய்யவேண்டியது என்ன? - தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் இதோ..

விளையாட்டு பயிற்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டிருக்கிறது.

விளையாட்டு பயிற்சிகளுக்கு அரசு அனுமதி: செய்யவேண்டியது என்ன? - தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் இதோ..
விளையாட்டு பயிற்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள தமிழக அரசு அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டிருக்கிறது.
  • Share this:
கொரோனா பரவல் காரணமாக அனைத்து விளையாட்டு மைதானங்களையும் மூட உத்தரவிட்ட தமிழக அரசு விளையாட்டு பயிற்சிகளையும் மேற்கொள்ள தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அதற்கான தடை நீக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்

• 15 வயதுக்குட்பட்டவர்களும் 50 வயதுக்கு அதிகமானவர்களும் பயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


• உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிக்கான தடை தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

• வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

• வெளிநாட்டிலிருந்து வரும் பயிற்சியாளர்களின் உடல்நிலையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.• விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும்.

• ஒலிம்பிக், சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க...

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ரிடர்ன்ஸ்.. ராய் ஜோன்சுடன் செப்.12-ஆம் தேதி மோதுகிறார்..

• விளையாட்டு வீரர்களில் யாரேனும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

• தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும்.

• பளுதூக்குதல், வில்வித்தை, பேட்மிட்டன், குத்துச்சண்டை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading