ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA கால்பந்து திருவிழா : கூகுள் நடத்தும் ஆன்லைன் போட்டியில் பங்கேற்க ஆர்வமா? இதோ முழுமையான வழிகாட்டல்!

FIFA கால்பந்து திருவிழா : கூகுள் நடத்தும் ஆன்லைன் போட்டியில் பங்கேற்க ஆர்வமா? இதோ முழுமையான வழிகாட்டல்!

FIFA

FIFA

35 வயதான மெஸ்ஸி மற்றும் 37 வயதான ரொனால்டோ ஆகியோர் கத்தாரில் உள்ள மிகப்பெரிய மேடையில் தங்கள் இறுதி விளையாட்டுகளை பதிவு செய்ய உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கூகுள் டூடுல் FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 தொடக்கம்; மொபைல் சாதனத்தில் ஆன்லைன் கேமை விளையாடுவதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ -

உலகில் எந்த பிரபலமான நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு GOOGLE நிறுவனம் Doodle வெளியிட்டு கொண்டாடுவது வழக்கம். காலை , அறிவியல் பிரபலங்கள், சாதனைகள், போர்கள் , இழப்புகள் என எல்லா வகையிலும் டூடுல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று தொடங்கவுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி அதன் ரசிகர்களை குஷிப்படுத்த கூகுள் நிறுவனம் ஸ்பெஷல் டூடூலை வெளியிட்டுள்ளது.

க்யூட்டான இரண்டு அனிமேஷன் பூட்கள் ஒரு கால்பந்தை உதைப்பதைப் போன்ற டூடுல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டூடுலைக் கிளிக் செய்தால், அது உங்களை உலகக் கோப்பை கத்தார் 2022 பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அதில் மெகா நிகழ்வின் அனைத்து விவரங்களும் உள்ளன.

அதுமட்டுமல்லாது கால்பந்து ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்த ஒரு மினி மெய்நிகர் கால்பந்து போட்டியையும் ஏற்பாடு செய்துள்ளனர். எப்படி விளையாடுவது என்று யோசிக்கிறீர்களா….

இதையும் படிங்க: 32 நாடுகள் பங்கேற்கும் FIFA கால்பந்து திருவிழா : கத்தாரில் கோலாகலமாக இன்று தொடக்கம்

கூகுள் டூடுலை கிளிக் செய்தால் கத்தாரில் நடக்கும் அனைத்து போட்டிகளின் விபரங்களும் வரிசையாக வரும். அதன் வைத்து கீழ் ஓரத்தில் ஒரு நீல வண்ண கால்பந்து பட்டன் இருக்கும் அதை தேர்ந்தெடுத்தால் ரசிகர்களுக்கான போட்டி தளத்தை அடைந்து விடுவோம்.

அதில் போட்டியிடும் 32 நாடுகளுக்கான முதல் கட்ட போட்டி விபரங்கள் காணப்படும் அதில் ரசிகர்கள் தாங்கள் விரும்பும் நாட்டின் அணியுடன் சேர்ந்து விளையாடலாம்.

அதில் பந்து ஒன்று கொடுக்கப்படும். எதிரில் உள்ள அனிமேட்டட் கோல் கீப்பருக்கு எதிராக கால்பந்துகளை விரலால் ஏத்தித்தள்ள வேண்டும்.

கோல் கீப்பர் வகையில் பிடிபட்டால் அவுட் ஆகி விடுவீர்கள்.

ரசிகர்கள் அடிக்கும் கோள்கள் அந்த மெய்நிகர் விளையாட்டு அட்டவணையில் சேர்க்கப்படும். நேராக கால்பந்து வீரர்கள் பெரும் புள்ளிகள் பெறுவது போலவே ஒரு உணர்வை ஏற்படுத்தவே இந்த விளையாட்டு.

மொத்தமாக ஸ்கோர் போர்டு போடு எந்த அணியின் ரசிகர்கள் எவ்வளவு பெற்றிருக்கிறார்கள் என்று வரிசைப்படுத்தப்படும்.

உலகக் கோப்பையின் பெருமையை மகிழ்விக்கும் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு இந்த ஆண்டு உலகக் கோப்பை இறுதி வாய்ப்பாகும். 35 வயதான மெஸ்ஸி மற்றும் 37 வயதான ரொனால்டோ ஆகியோர் கத்தாரில் உள்ள மிகப்பெரிய மேடையில் தங்கள் இறுதி விளையாட்டுகளை பதிவு செய்ய உள்ளனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022