காமன்வெல்த் போட்டி: 66 பதக்கங்களை வென்றது இந்தியா

news18
Updated: April 15, 2018, 8:36 PM IST
காமன்வெல்த் போட்டி: 66 பதக்கங்களை வென்றது இந்தியா
காமென்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 3-ஆவதி இடம்
news18
Updated: April 15, 2018, 8:36 PM IST
ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வந்த 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் இன்று நிறைவடைந்தது. 26 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்தது.

கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டியில்  இந்தியா  26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்றது. இதன்மூலம், பதக்கப் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

முன்னதாக, போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்றார். பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 80 தங்கம் உள்பட மொத்தம் 198 பதக்கங்களைப் பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்தையும், 45 தங்கம் உள்பட மொத்தம் 136 பதக்கங்களைப் பெற்ற இங்கிலாந்து 2-ஆவது இடத்தையும் பிடித்தன.

இதற்குமுன், இந்தியா அதிகபட்சமாக 2010-இல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களையும், 2002-இல் மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 69 பதக்கங்களையும் வென்றது.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்