Home /News /sports /

உலகக் கோப்பை ஹாக்கி: ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி: ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் வெற்றி

ஜெர்மனி ஹாக்கி

ஜெர்மனி ஹாக்கி

2-வது கிராஸ் ஓவர் சுற்றில் நெதர்லாந்து - கனடா அணிகள் நாளை மோதவுள்ளன. இதில், வெற்றிபெறும் அணி, வருகின்ற 13-ம் தேதி இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் மலேசியாவை வீழ்த்தியதன் மூலம் ஜெர்மனி அணி நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 14-வது உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் நடைபெற்று வருகிறது. 4 பிரிவுகளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஒவ்வொரு பிரிவுலும் முதலிடம் பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின.

மேலும், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த அணிகள் CROSSOVER எனப்படும் 2-வது சுற்றில் விளையாடும். இந்தச் சுற்றில் வெற்றிபெறும் அணிகள், காலிறுதிக்குள் நுழையும்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற  'டி' லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி, மலேசியாவை எதிர்கொண்டது. வாழ்வா, சாவா என்ற நிலையில் களமிறங்கியதால் மலேசிய அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இருந்த போதும், இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.

கடைசிக் கட்டத்தில் ஜெர்மனியின் கையே ஓங்கி இருந்தது. அந்த அணியின் டிம் ஹெர்ஸ்பர்ச் (TIMM HERZBRUCH) 2 கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

முடிவில், 5-3 என்ற கோல்கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, லீக் ஆட்டத்தில் ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றிபெற்றது. இதன் மூலம், 'டி' பிரிவில் இருந்து நேரடியாக காலிறுதிக்குள் தடம் பதித்தது. அதேவேளையில், தோல்வியைத் தழுவிய மலேசியா தொடரில் இருந்து வெளியேறியது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்த நெதர்லாந்து, 5-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

நெதர்லாந்து, பாகிஸ்தான் அணிகள் 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்து CROSSOVER சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளன. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இன்றும், நாளையும் கிராஸ்ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளன. 2-வது சுற்றில் நெதர்லாந்து - கனடா அணிகள் நாளை மோதவுள்ளன. இதில், வெற்றிபெறும் அணி, வருகின்ற 13-ம் தேதி இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see... முன்னாள் எம்எல்ஏ மற்றும் விவசாயிகள் பெயரில் ரூ.3கோடி மோசடி
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hockey World Cup 2018

அடுத்த செய்தி