Home /News /sports /

ரெட் கார்டு கொடுத்த நடுவருக்கு சரமாரி குத்து... கால்பந்து வீரருக்கு 3 ஆண்டுகள் தடை...!

ரெட் கார்டு கொடுத்த நடுவருக்கு சரமாரி குத்து... கால்பந்து வீரருக்கு 3 ஆண்டுகள் தடை...!

News18

News18

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    கால்பந்து போட்டியின் போது நடுவரின் முடிவால் அதிருப்தி அடைந்த வீரர், நடுவரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் ஜெர்மனியில் நடந்துள்ளது.

    ஜெர்மனியில் உள்ளூர் கால்பந்து தொடரில் பங்கேற்ற எப்.எஸ்.வி மியூன்ஸ்டெர் என்ற அணியில் விளையாடிய ஹெஸ்ஸீ என்ற வீரர் சமீபத்தில் நடந்த போட்டியின் போது, விதிகளை மீறியதால் கள நடுவர் அவருக்கு ரெட் கார்டு காட்டி, களத்தில் இருந்து வெளியேற அறிவுறுத்தினார்.

    நடுவரின் முடிவால் அதிருப்தி அடைந்த ஹெஸ்ஸீ, நடுவரின் முகத்தில் வேகமாக குத்தி தாக்கினார். இதனால், நடுவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து, நடுவர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



    இந்த நிலையில், சம்பவம் குறித்து போட்டி நடத்திய கமிட்டி விசாரணை நடத்தி, ஹெஸ்ஸி கால்பந்து விளையாட மூன்று ஆண்டுகள் தடை விதித்தது. மேலும், எப்.எஸ்.வி மியூன்ஸ்டெர் அணிக்கும் 6 மாதம் தடை விதிக்கப்பட்டது. மேலும், 553 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    Also See...
    Published by:Sankar
    First published:

    Tags: Football

    அடுத்த செய்தி