பொட்டு வைத்துக்கொண்டு துப்பட்டா அணிந்துவந்த கவுதம் கம்பீர்

news18
Updated: September 14, 2018, 5:53 PM IST
பொட்டு வைத்துக்கொண்டு துப்பட்டா அணிந்துவந்த கவுதம் கம்பீர்
துப்பட்டா அணிந்து வந்த கவுதம் கம்பீர்.
news18
Updated: September 14, 2018, 5:53 PM IST
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நெற்றியில் பெரிய பொட்டுடன் துப்பட்டா வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். இவர் களத்தில் ஆக்ரோஷமாக ஆடுவதற்கு பெயர் போனவர். அவ்வப்போது எதிரணியின் வீரர்களுடனும் தகராறுகளிலும் ஈடுபட்டதுண்டு.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கம்பீர், இப்போது தன்னுடைய மனிதநேய முகத்தை வெளி உலகிற்கு காட்டி வருகிறார். சமீபத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான 377 என்ற சட்டப்பிரிவை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Loading...
இதை கொண்டாடும் வகையில் திருநங்கைகள் நடத்திய  `ஹிஜ்ரா ஹப்பா’ என்ற நிகழ்ச்சியில் கம்பீர் பங்குபெற்றார். அலெயென்ஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த விழாவை கவுதம் கம்பீர் தொடங்கிவைத்தார்.

 இந்த விழாவில் பங்கு பெறுபவர்கள் அங்குள்ள ஒரு சுரங்க பாதை வழியாக செல்லவேண்டும். அந்த சுரங்க பாதையின் வழியாக ஒருவர் செல்லும்போது குறிப்பிட்ட இடங்களில், சில பொருட்கள் கொடுக்கப்படும். அதை உள்ளே செல்பவர் அணிந்துகொள்ள வேண்டும். செல்பவர் ஆணாக இருந்தால் அவருக்கு துப்பட்டாவும், பெண்கள் அணியும் பெரிய பொட்டும் வழங்கப்படும். பெண்ணாக இருந்தால், ஒட்டு மீசை வழங்கப்படும்.அதில் உள்ளே சென்ற கம்பீர் துப்பட்டா மற்றும் பெரிய பொட்டுடன் வெளியே வந்தார். திருநங்கைகளாகவும், திருநம்பிகளாகவும் இருப்பது எப்படி இருக்கும் என்பதை ஒருவரை உணர்ச் செயவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்