முகப்பு /செய்தி /விளையாட்டு / 'கங்குலிக்கும் கோலிக்கும் பிரச்னை.. ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்கள்' - பரபரப்பை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!

'கங்குலிக்கும் கோலிக்கும் பிரச்னை.. ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்கள்' - பரபரப்பை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!

கங்குலி

கங்குலி

Chetan Sharma : தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை அவர் பேசியது அம்பலமானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டதாக தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசியது, கிரிக்கெட் உலகில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆடவருக்கான டி-20 போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை பிசிசிஐ கூண்டோடு கலைந்தது. இருப்பினும், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா தேர்வானார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சை கருத்துகளை அவர் பேசியது அம்பலமானது.

அதில், தனி நபர் ஒருவருரிடம் பேசிய சேத்தன் சர்மா, பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி, விராட் கோலியுடன் இணக்கமாக இருந்ததில்லை என்றும், அதேவேளையில் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், காயமடைந்த வீரர்கள் உடல்தகுதி பெறாத நிலையிலும், ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு அணிக்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் பிசிசிஐ நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்று, பல்வேறு விஷயங்களை சேத்தன் சர்மா பேசியதாக வெளியான வீடியோ கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: BCCI