HOME»NEWS»SPORTS»full details of india vs england match srs ghta

INDIA vs England: போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானம் உள்ளிட்ட முழுவிவரம்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்கிறது.

INDIA vs England: போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானம் உள்ளிட்ட முழுவிவரம்!
இந்திய அணி
  • Share this:

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்கிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்திய அணி, தாய்மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற இது முக்கியமான டெஸ்ட் தொடர் என்பதால், இரு அணிகளும் முழு பலத்துடன் களம் இறங்க காத்திருகின்றன. முதலாவதாக இவ்விரு அணிகளுக்கு இடையில் டெஸ்ட் போட்டி தொடர் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் - பிப்ரவரி 5 - 9, சென்னை சேப்பாக்கம்,



2வது டெஸ்ட்  - பிப்ரவரி 13-17, சென்னை சேப்பாக்கம்,

3வது டெஸ்ட் - பிப்ரவரி 24-28, (பகல் - இரவு போட்டி) சர்தார் படேல் மைதானம், அகமதாபாத்

4வது டெஸ்ட் - மார்ச் 4-8, சர்தார் படேல் மைதானம், அகமதாபாத்,

20 ஓவர் தொடர்

முதல் போட்டி - மார்ச் 12

2வது போட்டி - மார்ச் 14

3வது போட்டி - மார்ச் 16,

4வது போட்டி - மார்ச் 18

5வது போட்டி - மார்ச் 20

*அனைத்து 20 ஓவர் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடர்

முதல் போட்டி - மார்ச் 23

2வது போட்டி - மார்ச் 26

3வது போட்டி - மார்ச் 28

* அனைத்து போட்டிகளும் புனேவில் உள்ள எம்.சி. (MCA) மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி

வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விருத்திமான் சஹா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.

வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள்: அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர்,கே. கவுதம், சவுரப் குமார்

மாற்று வீரர்கள்: பிரியங்கா பஞ்சல், கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர்

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி

வீரர்கள் விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, டோம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், டோம் சிபிலி, கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன் .

அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
Published by:Ram Sankar
First published: