HOME»NEWS»SPORTS»full details about ipl auction 2021 srs ghta

IPL auction 2021 - எட்டு அணிகளின் வீரர்கள் மற்றும் பட்ஜெட்டுகள் குறித்த முழு விவரம்..

IPL auction 2021 - எட்டு அணிகளின் வீரர்கள் மற்றும் பட்ஜெட்டுகள் குறித்த முழு விவரம்..
ஐ.பி.எல் ஏலம் 2021
  • Share this:

நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலைக் கடந்த மாதமே அளித்துவிட்டன. மேலும், ஏராளமான வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 8 அணிகளும் வீரர்களின் பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளன. அதன்படி 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 

ஐபிஎல் 2021ன் தொடக்க தேதியை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சமீபத்திய தகவல்களின்படி, ஐபிஎல் போட்டியின் 14வது பதிப்பு ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) அதிக எண்ணிக்கையிலான இடங்களை கொண்டிருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10.75 கோடி பட்ஜெட்டுடன் வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் சுமார் ரூ. 53.20 கோடியுடன் ஏலத்தில் நுழைகிறது, அதே நேரத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ .19.90 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது.  

ஏலத்தில் பங்கேற்றுள்ள முக்கிய வீரர்கள் யார் யார்? எட்டு அணிகளுக்கும் கையிருப்பு எவ்வளவு உள்ளது? வீரர்களில் யாருக்கு அதிக போட்டி? அனைத்தையும் விரிவாக காணலாம்.  



எட்டு அணிகள் குறித்த முழு விவரங்கள் :  

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

வீரர்களின் எண்ணிக்கை : 19

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 07

ஸ்லாட் : 06

வெளிநாட்டு ஸ்லாட்: 01

பட்ஜெட் : 19.90 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ் (DC) 

வீரர்களின் எண்ணிக்கை : 17

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 05

ஸ்லாட் : 08

வெளிநாட்டு ஸ்லாட்: 03

பட்ஜெட் : 13.04 கோடி

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) 

வீரர்களின் எண்ணிக்கை : 16 

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 03

ஸ்லாட் : 09

வெளிநாட்டு ஸ்லாட்: 05

பட்ஜெட் : 53.20கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KR)

வீரர்களின் எண்ணிக்கை : 17

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 06

ஸ்லாட் : 08

வெளிநாட்டு ஸ்லாட்: 02

பட்ஜெட் : 10.75 கோடி

மும்பை இந்தியன்ஸ் (MI)

வீரர்களின் எண்ணிக்கை : 18

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 04

ஸ்லாட் : 07

வெளிநாட்டு ஸ்லாட்: 04

பட்ஜெட் : 15.35 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 

வீரர்களின் எண்ணிக்கை : 16

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 05

ஸ்லாட் : 09

வெளிநாட்டு ஸ்லாட்: 03

பட்ஜெட் : 15.35 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  (RCB)

வீரர்களின் எண்ணிக்கை : 14

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 05

ஸ்லாட் : 14

வெளிநாட்டு ஸ்லாட்: 03

பட்ஜெட் : 35.40 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SH) 

வீரர்களின் எண்ணிக்கை : 22

வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை: 07

ஸ்லாட் : 03

வெளிநாட்டு ஸ்லாட்: 01

பட்ஜெட் : 10.75 கோடி. 
Published by:Ram Sankar
First published: