• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

இத்தாலி வீரர் லாரென்சோ சோனிகோவை பெடரர் எதிர்கொண்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தாலி வீரர் லாரென்சோ சோனிகோவை பெடரர் எதிர்கொண்டார். இதில் 6- 2, 6- 4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி கண்ட பெடரர், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.



இதேபோல் மற்றோரு ஆட்டத்தில் கிரீக் வீரர் சிட்சிபாஸ், ஜெர்மனி வீரர் மக்ஸ்மில்லர் மார்ட்டரை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கெர்பரும், 81-வது இடத்தில் இருக்கும் அனஸ்டாசியாவும் மோதினர்.

இந்தப் போட்டியில் 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் கெர்பரை அனஸ்டாசியா வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இதுவரை 6 முறை கெர்பர் வென்றுள்ளார். ஆனால் இந்த முறை சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: