பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை 11-வது முறையாக வென்றார் நடால்

news18
Updated: June 10, 2018, 10:03 PM IST
பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை 11-வது முறையாக வென்றார் நடால்
ரபேல் நடால்.
news18
Updated: June 10, 2018, 10:03 PM IST
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டொமினிக் தீம்மை வீழ்த்தி 11-வது முறையாக ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

டென்னிஸ் தொடரின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.  இந்தப் போட்டியில் முதல் நிலை வீரர் ரபேல் நடால் மற்றும் டொமினிக் தீம் மோதினர். தொடக்கம் முதலே ரபேல் நடால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். நடாலின் ஷாட்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 3 நேர் செட்டுகளையும் நடாலுக்கு தீம் விட்டுத்தந்தார். ரபேல் நடால் 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 11 முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமை நடாலுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிராண்ட்ஸ்லாம் 11 பட்டங்களை பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமை நடாலுக்கு வந்துசேரும். ஏற்கெனவே ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்கரேட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை 11 முறை வென்று இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது இதுவரை ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். பெடரரை அடுத்து 2-வது இடத்தில் ரபேல் நடால் உள்ளார். அவர் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
First published: June 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...