முகப்பு /செய்தி /விளையாட்டு / பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நடால்!

ரபேல் நடால்

ரபேல் நடால்

#FrenchOpen2019 | #RogerFederer | #RafaelNadal | பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருவரும் இதுவரை 5 முறை மோதி உள்ளனர். இதில் அனைத்து போட்டிகளிலும் நடாலே வெற்றி பெற்றுள்ளார்.

  • Last Updated :

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பாரிஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஓற்றையர் அரையிறுதிப் போட்டியின் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் பெடரரும், 2-வது இடத்தில் இருக்கும் நடாலும் மோதினர்.

பெடரரும் நடாலும் நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களில் 23-15 என நடால் முன்னிலையில் உள்ளார். நடாலுக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் பெடரரே வெற்றி பெற்றுள்ளார். அதேசமயம் களிமண் தரையில் 13-2 என நடாலே முன்னிலையில் உள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால் - பெடரர் இதுவரை 5 முறை மோதி உள்ளனர். இதில் அனைத்து போட்டிகளிலும் நடாலே வெற்றி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் கடைசியாக இவர்கள் இருவரும் 2011-ம் ஆண்டு மோதினர். இதனால் இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள் என பரபரப்பு நிலவியது.

போட்டியின் முதல் சுற்றை 6-3 என நடால் கைப்பற்றினார். அடுத்த சுற்றில் பெடரர் ஆரம்பத்தில் சற்று நெருக்கடி கொடுத்த போதும் சுதாரித்து ஆடிய நடால், அந்தச் சுற்றையும் 6-4 என்று கைப்பற்றினார்.

போட்டியில் நடாலின் ஆதிக்கம் அதிகரித்ததால் 3-வது சுற்றையும் 6-2 என்ற நேர்செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேறினார்.

First published:

Tags: French open Tennis 2019, Novak Djokovic, Rafael Nadal, Roger Federer