டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு நான்கு தமிழக வீரர்கள் தகுதி- வரலாறு படைத்தது தமிழ்நாடு

ஒலிம்பிக் வீரர்கள்

தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், வருண், கணபதி ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். 

  • Share this:
இந்தியாவிலிருந்து பாய்மர படகுப்போட்டிக்கு நான்கு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். நான்கு வீரர்களும் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும். மகளிர் பிரிவில் சென்னையை சேர்ந்த 23 வயதான நேத்ரா குமணன், மகளிர் ஒற்றையர் லேசர் ரேடியல் பிரிவில்  களமிறங்குகிறார்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து தகுதி பெறும் முதல் வீராங்கனை என்ற சாதனைபடைத்துள்ளார். வருண் மற்றும் கணபதி இருவரும் இணைந்து 49-வது பிரிவில் களமிறங்குகின்றனர்.
வேலூரைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் மும்பையிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்ய ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து வீரர்களை தேர்வு செய்யும் வகையில் ஓமனில் நடைபெற்ற முஷ்ஷனா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்களும் இந்தியா சார்பில் களம்கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: