ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: முன்னாள் சாம்பியன் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

news18
Updated: August 10, 2018, 9:59 AM IST
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: முன்னாள் சாம்பியன் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
ஜோகோவிச்
news18
Updated: August 10, 2018, 9:59 AM IST
ரோஜர்ஸ் கோப்பை மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னாள் சாம்பியனான ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.

கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நடைபெறும் இத்தொடரின், மூன்றாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ்-வுடன் மோதினார். இத்தொடரில் 4 முறை சாம்பியனும், நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான ஜோகோவிச் எளிதில் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஸ்டெஃபனாஸ், கடும் சவால் அளிக்கும் வகையில் ஆடி, ஜோகோவிச்சுக்கு நெருக்கடி கொடுத்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்டெஃபனாஸ், 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிக்கு முன்னேறினார். இவர், மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்-வை 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து, காலிறுதியில் ஸ்டெஃபனாஸ் - ஸ்வெரெவ் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...