Home /News /sports /

5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா ஓய்வு அறிவிப்பு

5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா ஓய்வு அறிவிப்பு

மரியா ஷரேபோவா,

மரியா ஷரேபோவா,

டென்னிஸ் போட்டிகளில் 5 முறை கிராண்ஸ்லாம் பட்டம் வென்ற 32 வயதான மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மரியா ஷரபோவா டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன், ஆஸ்திரேலய ஓபன் மற்றும் யு.எஸ் ஓபன் தொடரை ஒரு முறை வென்றுள்ளார்.  அதே போல் பிரெஞ்சு ஓபன் தொடரை 2 முறை வென்றுள்ளார்.

2016ம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் போது நடைபெற்ற ஊக்கமருந்து சோதனையில் இவர் தோல்வியடைந்ததால் அவருக்கு தடைவிதிக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் அவர் தனது ஓய்வுமுடிவை அறிவித்துள்ளார்.

தனது உடலில் அதிகரித்து வரும் காயத்தின் பிரச்னைகள்  காரணமாக உடல்நலனை பாதுகாக்க முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஷரபோவா தெரிவித்துள்ளார். மேலும் என் வாழ்வில் டென்னிஸ் மிகவும் மதிப்புக்குரியது. என்னை மன்னித்துவிடுங்கள். டென்னிஸிலிருந்து நான் விடைபெறுகிறேன் என்றுள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Tennis

அடுத்த செய்தி