எல்லையில் எதிரெதிர் நாடுகள்; ஒலிம்பிக்கில் ஒரே நாடு!

news18
Updated: February 12, 2018, 11:53 AM IST
எல்லையில் எதிரெதிர் நாடுகள்; ஒலிம்பிக்கில் ஒரே நாடு!
news18
Updated: February 12, 2018, 11:53 AM IST
வடகொரியா, தென்கொரியா அணிகள் இணைந்து முதன்முறையாக ஒரே கொடியின் கீழ் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. 

போர்க்களத்தில் ஆயுதத்துடன் பார்த்தே பழக்கப்பட்ட இரு நாடுகளான வடகொரியாவையும், தென் கொரியாவையும் பியாங்சாங் ஒலிம்பிக் போட்டியில் ஒன்றிணைத்துள்ளது. முதன்முறையாக இருநாடுகளும் ஒரே கொடியின் கீழ் இந்த ஒலிம்பிக் போட்டியில் அணிவகுத்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது

ஒரே கொடியின் கீழ் அணிவகுத்ததோடு இல்லாமல், மகளிருக்கான ஐஸ் ஹாக்கி போட்டியில் இரு அணிகளும் இணைந்தே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதால் விமானநிலையம் வந்த இருநாட்டு வீராங்கனைகளுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது முதல் லீக் ஆட்டத்தில் கொரியா, சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. கொரிய அணி மைதானத்தில் கால்பதித்தது முதலே ரசிகர்கள் உற்சாக குரலெழுப்பி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

60 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கில் கொரியா தோல்வியைத் தழுவியது.

தோல்வியைத் தழுவினாலும் , வடகொரியாவும் தென்கொரியாவும் ஒரே நாடாக இணைந்து கைகோர்த்தது அந்நாட்டு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
First published: February 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...