Home /News /sports /

மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

இந்திய ஹாக்கி மகளிரணி

இந்திய ஹாக்கி மகளிரணி

போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை ராணி ரம்பால் ஒரு கோல் அடித்து கணக்கை தெடாங்கினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மகளிர் உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

ஜப்பானின் ஹிரோசிமா நகரில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி! இந்தியா - ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்தில் இந்திய வீராங்கணை ராணி ரம்பால் ஒரு கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 11-வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் போட்டது. இதன்பின் ஆட்டம் மிகவும் சுவரஸ்யமாகச் சென்றது. இரு அணிகளும் கோல் போடும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 45-வது நிமிடத்தில் அசத்தான ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பின் 60-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பயின் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: Hockey, Women's hockey world cup

அடுத்த செய்தி