சர்வதேச ஹாக்கி தரவரிசை: 2020-ம் ஆண்டை 4-ம் இடம் பெற்று முடித்த இந்திய ஆடவர் அணி

2020-ம் ஆண்டின் பெரும்பகுதி கோவிட்-19 காய்ச்சல், வைரஸ் பரவலினால் பெரிய அளவில் பாதிக்கப்பட, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட ஆடவர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4ம் இடத்தில் முடிந்துள்ளது.

2020-ம் ஆண்டின் பெரும்பகுதி கோவிட்-19 காய்ச்சல், வைரஸ் பரவலினால் பெரிய அளவில் பாதிக்கப்பட, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட ஆடவர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4ம் இடத்தில் முடிந்துள்ளது.

 • Share this:
  2020-ம் ஆண்டின் பெரும்பகுதி கோவிட்-19 காய்ச்சல், வைரஸ் பரவலினால் பெரிய அளவில் பாதிக்கப்பட, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட ஆடவர் ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 4ம் இடத்தில் முடிந்துள்ளது.

  அதே போல் மகளிர் ஹாக்கி அணி 9ம் இடத்தில் முடிந்துள்ளது.

  சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் முதலிடம் வகித்து வருகிறது.

  ஆடவர் ஹாக்கியில் ஐரோப்பிய சாம்பியனான பெல்ஜியம் 2496.88 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. 2385.70 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும் 2,257.96 புள்ளிகளுடன் நெதர்லாந்து 3ம் இடத்திலும் 2063.78 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 2020ம் ஆண்டை முடித்துள்ளது.

  ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினா 5ம் இடத்திலும் ஜெர்மனி 6ம் இடத்திலும் இங்கிலாந்து 7ம் இடத்திலும் நியூஸிலாந்து 8ம் இடத்திலும் ஸ்பெயின் 9ம் இடத்திலும் கனடா 10-ம் இடத்திலும் 2020-ஐ முடித்துள்ளது.

  மகளிர் ஹாக்கி அணி தரவரிசையில் நெதர்லாந்து முதலிடம். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அர்ஜெண்டினா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, இந்தியா, சீனா ஆகிய அணிகளும் உள்ளன.
  Published by:Muthukumar
  First published: