ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கால்பந்து: ஸ்பெயினை கவிழ்த்த பெனால்டி ஷூட்.. காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ!

கால்பந்து: ஸ்பெயினை கவிழ்த்த பெனால்டி ஷூட்.. காலிறுதிக்கு முன்னேறிய மொராக்கோ!

மொராக்கோ அணி

மொராக்கோ அணி

FIFA World Cup 2022: கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்த ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு மொராக்கோ அணி முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஸ்பெயினை வெளியேற்றி முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி - மொராக்கோ அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். இருப்பினும் இரண்டு அணிகளின் கோல் கீப்பர்களையும் தாண்டி முன்கள ஆட்டக்காரர்களால் பந்தை கோல் வலைக்குள் தள்ளமுடியவில்லை. இதனால், பிரதான நேரம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.

ICC Award : நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பட்லர், ரஷித், அப்ரிதி பெயர்கள் பரிந்துரை

இதையடுத்து, கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்த ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது. குறிப்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ்களை ஸ்பெயின் வீரர்கள் விளையாடினர். இறுதி நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் சபீர் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு நூழிலையில் தப்பித்தது.

இதனால், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஸ்பெயின் அணியின் மூன்று வாய்ப்புகளையும் தகர்த்தெறிந்த மொராக்கோ கோல் கீப்பர் யாசின், தனது அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்தார்.

நான்கில் மூன்று வாய்ப்புகளை கோலாக மாற்றிய மொராக்கோ 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை 6 முறை உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ள மொராக்கோ அணி, முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

First published:

Tags: FIFA 2022