ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சோர்ந்துபோன தேகம்.. முகமெல்லாம் சோகம்.. தங்க காலணியை வென்றும் தர்ம சங்கடத்தில் சுற்றிய எம்பாபே.!

சோர்ந்துபோன தேகம்.. முகமெல்லாம் சோகம்.. தங்க காலணியை வென்றும் தர்ம சங்கடத்தில் சுற்றிய எம்பாபே.!

எம்பாபே

எம்பாபே

இறுதிப் போட்டியில் தனியாளாக போராடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaQatarQatarQatar

அதிக கோல்கள் அடித்து தடம் பதித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, தங்க காலணியை வென்று ஆறுதல் தேடிக்கொண்டார். ஆனால் பிரான்ஸ் அணி தோல்வியால் அந்த விருதை கூட மகிழ்ச்சியாக பெற முடியாத தர்ம சங்கடத்தில் தவித்தார்.

கத்தார் உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய லயோனல் மெஸ்ஸி, மொத்தம் 7 கோல்கள் அடித்தார். அத்துடன், உலகக் கோப்பை வரலாற்றில் லீக் சுற்று, நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

இதற்கிடையே இறுதிப் போட்டியில் தனியாளாக போராடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப் ஹர்ஸ்ட்-க்கு அடுத்து இறுதிப் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரராக ஜொலித்தார். இத்தொடரில், மொத்தம் 8 கோல்கள் அடித்து, "தங்க காலணி" விருதை எம்பாப்பே வென்றார். தனிப்பட்ட வீரராக சாதித்த போதும், பிரான்ஸ் அணி வெற்றி பெறாததால், அவரால் அதை கொண்டாட முடியாமல் போனது.

மெஸ்ஸி:

உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையை மெஸ்ஸி படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், சாம்பியன் கோப்பை, தங்கப் பதக்கம் உட்பட 3 தங்கத்தை உச்சி முகர்ந்தார். மேலும், 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறை GOLDEN BALL விருதை முத்தமிட்டார்.

வ. எண்விருதுபெயர்
1சிறந்த வீரர்லயோனல் மெஸ்ஸி
2சாம்பியன் கோப்பைலயோனல் மெஸ்ஸி
3தங்கப் பதக்கம்லயோனல் மெஸ்ஸி
4GOLDEN BALLலயோனல் மெஸ்ஸி
5தங்க காலணிஎம்பாப்பே
6தங்க கையுறைமார்டினெஸ்
7சிறந்த இளம் வீரர்என்சோ பெர்னாண்டஸ்

கத்தார் உலகக் கோப்பையில் அரண் போல் செயல்பட்டு, அர்ஜென்டினாவை கரை சேர்த்த அந்த அணியின் மார்டினெஸ், சிறந்த கோல் கீப்பருக்கான "தங்க கையுறை" விருதை வென்றார். மேலும், அஜென்டினாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்-க்கு (Enzo Fernández) சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

First published:

Tags: Argentina, FIFA World Cup 2022, France