ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கால்பந்து: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்திய பிரேசில், போர்ச்சுகல் அணிகள்!

கால்பந்து: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்திய பிரேசில், போர்ச்சுகல் அணிகள்!

ஃபிஃபா போர்சுகல் அணி

ஃபிஃபா போர்சுகல் அணி

1-0 என்ற கோல்கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய பிரேசில் அணி, தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றிபெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • intern, IndiaQatar Qatar

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், போர்ச்சுகல் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், 'ஜி' பிரிவில் இடம் பிடித்துள்ள பலம் வாய்ந்த பிரேசில் அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியதில் இருந்தே, இரு அணிகளும் தாக்குதலை தீவிரப்படுத்திய போதும் பரஸ்பரம் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதனால், முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி சமநிலையை எட்டியது.

2வது பாதியிலும் இதே நிலை நீடித்ததால் விறுவிறுப்பு கூடியது. இருப்பினும், 83-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் காஸ்மிரோ, நேர்த்தியாக கோல் அடித்து அசத்தினார். இதனால், 1-0 என்ற கோல்கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய பிரேசில் அணி, தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றிபெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

FIFA உலகக் கோப்பை தொடர் : காலிறுதி போட்டி வரை முன்னேறிய சென்னை வீராங்கனைகள்!

இதையடுத்து 'ஹெச்' பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், போர்ச்சுல் அணி ஆதிக்கம் செலுத்திய போதும், முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. 2வது பாதியில் உருகுவே கோல்கம்பத்தை போர்ச்சுகல் வீரர்கள் முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். இதன் பயனாக, 54-வது நிமிடத்தில் பெர்னாண்டஸ் கோல் அடித்து, தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். கடைசி நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றியதால், போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது வெற்றியை ருசித்த போர்ச்சுகல் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

First published:

Tags: Brazil, FIFA World Cup 2022