ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA உலகக் கோப்பை இன்று தொடக்கம் : எங்கே, எப்படி நேரலையில் பார்க்கலாம்?

FIFA உலகக் கோப்பை இன்று தொடக்கம் : எங்கே, எப்படி நேரலையில் பார்க்கலாம்?

FIF தொடக்க விழா

FIF தொடக்க விழா

இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடக்க விழா 60,000 பேர் கொண்ட அல் பேட் மைதானத்தில் நடைபெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

FIFA உலகக் கோப்பை 2022 நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறும், இதில் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.

போட்டியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் மாறியுள்ளது. 64 போட்டிகளை நடத்த கத்தார் முழுவதும் எட்டு மைதானங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன

தொடக்க  விழா

23 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை கத்தார் நேரப்படி 5 .30 மணிக்கு தொடங்கும். இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடக்க விழா 60,000 பேர் கொண்ட அல் பேட் மைதானத்தில்

நடைபெறும். அதிகப்படியான ரசிகர்களை அமரவைக்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதில் பார்க்கலாம்?

இந்த விழா மாற்று FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்போர்ட்ஸ்18 எச்டி டிவி சேனல்களில் நேரடியாக கண்டு மகிழலாம். ஜியோ சினிமா செயலியிலும் www.jiocinema.com/sports என்ற இணையதளத்திலும் இலவசமாகக் கண்டு மகிழலாம்.

தொடக்க விழாவில் யார் பாடுவார்கள்?

FIFA இன்னும் முழு கலைஞர்களின் பட்டியலை அறிவிக்கவில்லை என்றாலும், தென் கொரிய பாய் இசைக்குழு BTS இன் ஜங்கூக் விழாவில் 'ட்ரீமர்ஸ்' நிகழ்ச்சியை நடத்துவர். பிளாக் ஐட் பீஸ், ராபி வில்லியம்ஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், பிரிட்டிஷ் பாடகி துவா லிபா மற்றும் கொலம்பிய பாடகி ஷகிரா ஆகியோர் கத்தாரில் தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

முதல் போட்டி:

அல்கோரில் உள்ள அல் பைட் மைதானத்தில் குரூப் ஏ நாடுகளான கத்தார், ஈக்வடார் இடையே முதல் போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: FIFA 2022, FIFA World Cup 2022, Qatar