ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அரைமணி நேரத்தில் 3 கோல்கள்.. மொத்தம் 7.. கால்பந்து தொடரில் கோல்மழை பொழிந்த ஸ்பெயின்.!

அரைமணி நேரத்தில் 3 கோல்கள்.. மொத்தம் 7.. கால்பந்து தொடரில் கோல்மழை பொழிந்த ஸ்பெயின்.!

ஸ்பெயின் vs கோஸ்டாரிகா

ஸ்பெயின் vs கோஸ்டாரிகா

fifa world cup 2022: உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் ஸ்பெயின் அடித்த அதிக கோல்கள் இதுவே ஆகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaQatarQatarQatar

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில், கோஸ்டாரிகாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் கோல் மழை பொழிந்தது.

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அல் துமாமா மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணியை எதிர்கொண்டது. இளம் வீரர்களுடன் களம் கண்ட ஸ்பெயின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. முதல் அரை மணி நேரத்துக்குள் அந்த அணி 3 கோல்கள் அடித்தது.

    டேனி ஒல்மோ, ஸ்பெயின் அணிக்காக 100வது உலகக் கோப்பை கோலை அடித்தார். இரண்டாவது பாதி ஆட்டத்திலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் மேலும் 4 கோல்கள் அடித்து 7க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும், உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் ஸ்பெயின் அடித்த அதிக கோல்கள் இதுவே ஆகும்.

    இதையடுத்து நள்ளிரவில் அமகது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை களம் காணும் கனடா, பெல்ஜியத்தை எதிர்கொண்டது. உலகக் கோப்பையில் இதுவரை கோலே அடிக்காத கனடா அணிக்கு ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே பெனால்டிக் வாய்ப்பு கிடைத்தது.

    உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாடிய இந்திய வீரர் ஆட்டோ ஓட்டும் பரிதாபம்; வறுமையை வெல்ல வழியில்லாமல் பரிதவிக்கும் கொடூரம்

    எனினும், அதை பெல்ஜியம் கோல்கீப்பர் அற்புதமாக தடுத்துவிட்டார். அதேநேரத்தில் பெல்ஜியம் வீரர் டோபி 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், பெல்ஜியம் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Canada, FIFA World Cup 2022, Spain