ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பை கால்பந்து: ஒரு கோலுக்காக கடைசிவரை போராட்டம்.. செனகல் அணியை பந்தாடிய நெதர்லாந்து !

உலகக் கோப்பை கால்பந்து: ஒரு கோலுக்காக கடைசிவரை போராட்டம்.. செனகல் அணியை பந்தாடிய நெதர்லாந்து !

செனகல் vs நெதர்லாந்து

செனகல் vs நெதர்லாந்து

FIFA World Cup 2022: கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடத்தில், செனகல் கோல்கீப்பரிடம் இருந்து திரும்பிவந்த பந்தை மீண்டும் கோல் வலைக்குள் தள்ளினார் கிலாசன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaQatarQatar

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

    நடைபெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் செனகல் - நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சமபலத்துடன் மோதின. முதல் பாதியில் இரு அணிகளின் கோல் முயற்சிகள் பரஸ்பரம் முறியடிக்கப்பட்டன.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டின. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், 83 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கக்போ நேர்த்தியாக கோல் அடித்து அசத்தினார்.

    தொடர்ந்து தாக்குதலை நெதர்லாந்து வீரர்கள் தீவிரப்படுத்திய நிலையில், கூடுதல் நேரத்தின் இறுதி நிமிடத்தில், செனகல் கோல்கீப்பரிடம் இருந்து திரும்பிவந்த பந்தை மீண்டும் கோல் வலைக்குள் தள்ளினார் கிலாசன்.

    இறுதி வரை போராடியும் செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

    'தேசிய கீதம் பாட மாட்டோம்'.. ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் கால்பந்து வீரர்கள் போர்கொடி.. மைதானத்தில் பரபரப்பு.. 

    இதனையடுத்து அல்-ரய்யானில் உள்ள அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற 'பி' பிரிவின் மற்றொரு லீக் போட்டியில் அமெரிக்கா - வேல்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே சமபலத்துடன் மோதியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது.

    36-வது நிமிடத்தில் அமெரிக்கா முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதையடுத்து, பதிலடி கொடுக்க வேல்ஸ் அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். பரபரப்பான கட்டத்தில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வேல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கெராத் பேல், கோல் அடித்து அசத்தினார். இதனால், இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: FIFA World Cup, Qatar