முகப்பு /செய்தி /விளையாட்டு / கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து.. காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து.. காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

அமெரிக்கா vs நெதர்லாந்து

அமெரிக்கா vs நெதர்லாந்து

தொடர்ந்து 81 வது நிமிடத்தில் முதல் இரண்டு கோலுக்கு உதவிய நெதர்லாந்து வீரர் டம்ஃப்ரைஸ், அசத்தலாக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • intern, IndiaQatarQatar

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து முதல் அணியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கத்தாரில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா விறுவிறுப்பான நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. போட்டி தொடங்கிய 10 வது நிமிடத்தில் டெப்பே கோல் அடித்து அரங்கத்தை அதிர வைத்தார்.

முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பிளைண்ட் மேலும் ஒரு கோல் அடிக்க 2-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது. 2வது பாதியில் அமெரிக்க வீரர்கள் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். 76 வது நிமிடத்தில் ஹாஜி கோல் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். தொடர்ந்து 81 வது நிமிடத்தில் முதல் இரண்டு கோலுக்கு உதவிய நெதர்லாந்து வீரர் டம்ஃப்ரைஸ், அசத்தலாக கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

6 முறை நாக் அவுட் சுற்றில் விளையாடியுள்ள நெதர்லாந்து ஐந்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அத்துடன் உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்தில்லை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

First published:

Tags: FIFA World Cup 2022, Football, Netherlands, USA