ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA கால்பந்து நாக்அவுட் சுற்றுகள் இன்று தொடக்கம்... முதல் போட்டியில் நெதர்லாந்து- அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை!

FIFA கால்பந்து நாக்அவுட் சுற்றுகள் இன்று தொடக்கம்... முதல் போட்டியில் நெதர்லாந்து- அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை!

கால்பந்து நாக் அவுட்

கால்பந்து நாக் அவுட்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து இன்று முதல் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. வாழ்வா சாவா போட்டியில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கும் அணிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaQatar Qatar

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் சுற்றுகள் இன்று தொடங்கிறது. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து, அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.

கத்தாரில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கால்பந்து யுத்தம் லீக் சுற்றுகள் முடிவடைந்து நாக் அவுட் சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 16 அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. அந்தவகையில் இன்று இரண்டு நாக் அவுட் போட்டிகள் களைகட்டவுள்ளது.

நெதர்லாந்து - அமெரிக்கா மோதல்

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் நாக் அவுட் சுற்றில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடைசியாக விளையாடிய ஐந்து உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணி நான்கில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளை தவிற மற்ற நாடுகளிடம் தோற்றதில்லை என்ற வரலாறோடு களமிறங்க காத்திருக்கிறது.

அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா மோதல்

அமெரிக்க அணியை பொருத்தவரை ஐரோப்பிய நாடுகளை வென்றதில்லை என்பதால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினா அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது.

குரூப் சுற்றில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றியை பதிவு செய்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

உலகக் கோப்பையில் இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதவுள்ளன. கடந்த உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றோடு வெளியேறிய அர்ஜெண்டினா இந்த முறை மெஸ்ஸி தலைமையில் கோப்பையை கைப்பற்றவேண்டும் என களமாடி வருகிறது.

உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஆஸ்திரேலியா இம்முறை அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைய தீவிரம் காட்டவுள்ளது.

முடிவை தீர்மானிக்க கூடுதலாக 30 நிமிடம்

நாக் அவுட் சுற்று என்பதால் போட்டி சமனில் முடிந்தால் கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்படும், அதிலும் சமனிலை எட்டினால் பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டு முடிவு தீர்மானிக்கப்படவுள்ளது.

First published:

Tags: FIFA World Cup, FIFA World Cup 2022, Football, Sports