முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக் கோப்பை கால்பந்து: உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்..!

உலகக் கோப்பை கால்பந்து: உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்..!

ஜெர்மெனி vs ஜப்பான்

ஜெர்மெனி vs ஜப்பான்

fifa world cup 2022: உலகின் தலை சிறந்த கோல் கீப்பர் நோயரை உரையவைத்து கோல் அடித்தார் ஜப்பான் வீரர் அசானோ.

  • Last Updated :
  • inter, IndiaQatarQatarQatar

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆசிய நாடுகள் அசத்தி வருகின்றன. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஜப்பான். குரோஷிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.  

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களை கோல் மழையில் நனையவைப்பது போல் அதிர்ச்சியையும் பரிசளித்து வருகிறது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி - ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. முதல் முறையாக இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ஜப்பான் கோல் கீப்பர் ஜெர்மனி வீரரை கீழே தள்ளிவிட நடுவர் பெனால்டிக்கு விசில் ஊதினார்.

ஜெர்மனி வீரர் குண்டகோன், பெனால்டியை லாவகமாக கோல் வலைக்குள் தள்ளி அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஜெர்மனி வீரர்களின் தாக்குதலை அசால்டாக தகர்த்தெறிந்தார் ஜப்பான் கோல் கீப்பர்.

பந்தை ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றவே சிறமப்பட்ட ஜப்பான் 2வது பாதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஆட்டத்தின் 75 வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோல் அடிக்க பந்து கோல்கீப்பர் கையில் பட்டு மீண்டும் ஜப்பான் வீரரிடமே சென்றது. மீனுக்கு காத்திருக்கும் கொக்கு போல் ஜப்பான் வீரர் டோன், பந்தை கோல் வலைக்குள் அடித்து ஆட்டத்தை சமன்படுத்தினார்.

ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜப்பான் பாதியிலிருந்து கொடுத்த லாங் பாஸை அசால்டாக கையாண்டு உலகின் தலை சிறந்த கோல் கீப்பர் நோயரை உரையவைத்து கோல் அடித்தார் ஜப்பான் வீரர் அசானோ.

கத்தார் உலகக்கோப்பையை தமிழ் வர்ணனையில் கலக்கும் திருச்சி இளைஞர்... யார் இவர்? 

ஆட்டத்தின் இறுதியில் கோல் விழுந்ததால் சமன்படுத்த ஜெர்மனி கடுமையாக போரடியது ஆனாலும் எந்த பலனும் இல்லை. இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் முதல் முறையாக ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் வரலாறு படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் குரோஷியா - மொராகோ அணிகள் மோதின. எதிரணியின் கோல் கம்பத்தையே முற்றுகையிட்ட வண்ணம் இருந்த குரோஷியாவின் கோல் முயற்சிகள் நூழிலையில் தவறின.

இறுதிவரை போராடியும் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை இதனால் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

First published:

Tags: FIFA World Cup 2022, Germany, Japan